நள்ளிரவு வேளையில் யாழிலுள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்த முதலையினால் பெரும் பரபரப்பு.!!

யாழ் திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் வீடு ஒன்றினுள் புகுந்த முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சில தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில்  குறித்த முதலை வீ்ட்டு வளவுக்குள் புகுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. குறித்த வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்தே இந்த முதலை வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.