வவுனியாவில் திடீரென உயிரிழந்த பெண் – கொரோனா தொற்று எனச் சந்தேகம்..!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் மரணமடைந்த பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக பெண் ஒருவரினை தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய அ.கலைவாணி என்பவர் கொண்டுவரப்பட்டிருந்தார்.அவருக்கு வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடி மருத்துவ சேவையினை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.