பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு.!

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலைகள் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைக்குழு, இந்த விடயத்தை உச்ச நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்தக் கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில்,ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்சமயம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.இதன் போதே ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது உசிதமானதல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் அவர் மன்றுரைத்தார்.இந்நிலையில் தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 1027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.