இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதலளிக்கும் செய்தி…!!

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இல்லை என பொது சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கை சமூகத்திற்குள் நோயாளிகள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 20 நாட்களாக ஒரு நோயாளியேனும் சமூகத்திற்குள் இருந்து பதிவாகவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.