அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள முக்கியமான அறிவிப்பு..!

ஆசிரியர் மதிப்பாய்வு தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கல்வி அமைச்சினால் அரச பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடம் மற்றும் படிப்பிக்க பொருத்தமான பாடம் தொடர்பாக தேடிப்பார்க்க மதிப்பாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக கல்வி அமைச்சின் உத்தியோபூர்வ வலைத்தளமான moe.gove.lk இல் ஆசிரியர் மதிப்பாய்வு என குறிப்பிட்ட நீடிப்பில் அல்லது memis.moe.lk ஊடாக உள்நுழைய முடியும்.அதில் உள்ள அறிவுரைக்கு அமைய 2020.05.30 இற்கு முன் வினாக்கொத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.