கதிர்காமத்தில் உள்ள மலையில் கடவுளை தரிசிக்க சென்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்

கதிர்காமத்தில் உள்ள மலையில் கடவுளை தரிசிக்க சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகயீனமடைந்த இளைஞன் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலங்கொட உஸ்மதுலாவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய சலித்த தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் 18 மாணவ, மாணவிகள் கதிர்காமத்தில் உள்ள உயரமான மலையில் கடவுளை திரிசிக்க சென்ற சந்தர்ப்பத்தில் திடீர் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போதே இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.