சீனாவினால் கடத்திச்செல்லப்பட்ட இந்திய இளைஞரை விடுவித்த சீன இராணுவம்!

சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய இளைஞர், மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ மிரம் தரோம் என்ற இளைஞரையே இந்திய இராணுவத்திடம், சீனா .இராணுவம் ஒப்படைத்துள்ளது.

அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள பகுதிக்கு ஒன்றுக்கு வேட்டையாட சென்றிருந்தனர்.

இவர்கள் இருவரையும் சீன எல்லைப்பகுதியை அண்டியுள்ள பகுதியில் வைத்து இருவரையும் சீன இராணுவம் சிறைப்படுத்தியது

எனினும் இதில் ஜாணி யாயிங் தப்பி வந்துவிட்டார். இந்தநிலையிலேயே ஸ்ரீ மிரம் தரோம் என்ற சிறுவனை இந்திய .இராணுவத்திடம் சீன இராணுவம் ஒப்படைத்துள்ளது.