முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலி – இன்னொருவர் ஆபத்தான நிலையில்!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெகோ ரக மோட்டார் சைக்கிள் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தில் மோதியதால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர நிக்கசீல என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியைச் சேர்ந்த விமல் விக்னேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு (மாஞ்சோலை) எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.