சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மணவாளக்கோல உற்சவம் மிக எளிமையாக நடைபெற்றது.
மணவாளக்கோல உற்சவத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி எழுந்தருளி வேலவனுக்கு நேற்றுக் காலை சங்காபிஷேகம் இடம்பெற்றது.எனினும், ஆலயத்துக்குள் குறிப்பிட்ட பக்தர்களுடன் மட்டுமே இந்த அபிஷேகம் இடம்பெற்றது.
தொடர்ந்து மாலையில் சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றதுடன் சுவாமி உள்வீதியில் எழுந்தருளினார்.நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்றைய உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்றைய உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:ஐ.சிவசாந்தன்