தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவரும்,இளைஞனும்

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி ஒருவரும், இளைஞன் ஒருவரும் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொஹெம்பியகந்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியும், 20 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.