நாட்டில் முதன் முறையாக ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 பேரினால் அதிகரித்துள்ளது.இன்றைய தினம் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 449 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569 பேராக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.