மாமா உயிரிழந்த அதிர்ச்சியில் திடீரென மரணமடைந்த மருமகன்..!!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாமா உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத மருமகன் திடீர் மரணமடைந்த செய்தி ஒன்று நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இருவரும் கினிகத்ஹேன, சமன்புர பிரதேசத்தை சேர்ந்த 70 மற்றும் 35 வயதுடைய இருவராகும்.மரம் வெட்ட சென்று விபத்துக்குள்ளானமையினால் மாமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது மகளை திருமணம் செய்தவர் மாமனாருக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணியளவில் மாமனார் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் 4 மணி அளவில் வைத்தியசாலை ஊழியர்கள் இதனை மருமகனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனைக் கேட்ட மருமகனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார.உயிரிழந்த நபரின் மகள் குறித்த வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றுகின்ற நிலையில் அவர் இந்த செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.