இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!! நாடு முழுவதும் 50-60 கி.மீ வேகத்தில் காற்று..!! பொதுமக்களே அவதானம்…!

இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன், 13 மாவட்டங்களில் மிதமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், நாடு முழுவதும் 50- 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரத்னபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவரும் நிலையில் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், பச்சிளம் குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் மின்னலின் தாக்கம் இருக்கும் எனவும்,மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.