வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா? வாங்க என்னவென்று பார்ப்போம்

தேன் என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களுள் ஒன்று.

பழங்காலத்தில் இருந்தே தேன் நம்முடைய உணவு முறைகளில் கலந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இது சித்தா, ஆயுர்வேதா ஆகிய மருத்துவத்தில் தேன் துணை மருந்தாக சேர்க்கப்படுகிறது. இதில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது.

இனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலுக்கு  நல்ல நன்மைகள் கிடைக்கும்.

அந்தவகையில் தற்போது என்ன என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

  • வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் அதிலிருந்து விடுபடலாம்.
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி தேனில் உள்ளது. நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
  • வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேறும். மேலும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றும்.
  • தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும்.
  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
  • வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலை சரிசெய்யும்.