இலங்கையில் இன்று நடந்த பேரனர்த்தம்…!! குழந்தையும், பெண்ணும் பரிதாபமாகப் பலி..!!

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட மண்மேடு சரிந்து வீழ்ந்து ஒரு குழந்தையும், பெண்ணும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும், அலுகல பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இதேவேளை, கனமழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.களு கங்கையின் நீர்மட்டம் உயர்வதால், இரத்னபுரியில் ஒரு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரத்னபுரியில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.