மின் உபகரணங்கள் பாவனை தொடர்பில் வெளியான தடை !

இலங்கையில் அலுவலகங்கள், வீடுகளில் குளிரூட்டி பயன்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் தடையின்றி மின் பாவனையை குறைப்பதற்கான யோசனையை அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குளிரூட்டி பயன்பாட்டை நிறுத்துதல், அலுவலகங்களில் மின்சாதனங்களை அணைத்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மேலதிகமாக அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான வீதிகளில் விளக்குகளை அணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் யோசனைகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.