மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற இவ் விபத்தில் தந்தை தலை சிதறி உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் ஆரையம்பதி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி தந்தையும் மகனும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பிக்கப் வாகனம் மோதியதுடன் சாரதி தப்பியோடியுள்ளார்.
பிக்கப் வாகனம் மோதிய வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த நெல் அறுவடை செய்யும் இயந்தரத்தினுள் மோட்டார் சைக்கிள் சிக்கி தந்தை நசுங்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.