ஒரே இரவில் 19 மாற்றுத் திறனாளிகளை கொடூரமாக கொலை செய்த இளைஞர்….!! மரண தண்டனைக்கு காத்திருப்பு..!

ஜப்பானில் நள்ளிரவில் முதியோர் இல்லாம் ஒன்றில் புகுந்து 19 அங்கவீனர்களை (மாற்றுத் திறனாளிகள்) உறக்கத்தில் வைத்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ஜப்பானின் சாகமிஹாரா பகுதியில் 2016 ஜூலை 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் இரத்தம் தோய்ந்த கூரிய ஆயுதத்துடன் பொலிஸில் சரணடைந்திருந்தார்.அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இளைஞர் பெயர் சதோஷி உமாத்சு 26 வயது ஜப்பானில் சுகுய் லில்லி கார்டன் என்ற அங்கவீன்முற்றவர்களுக்கான முதியோர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவருக்கு அங்கவீனர்களைக் கண்டால் வெறுப்பு ஏற்படும். ஊனமுற்றவர்கள் மீதான வெறுப்பு காரணமாக 2016 பிப்ரவரி மாதம் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.நான்கு மாதங்களுக்கு பின்னர் ஜூலை 26 ஆம் திகதி நள்ளிரவு தான் வேலை பார்த்த முதியோர் இல்லத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தி 19 முதியவர்களை கொலை செய்துள்ளார்.சம்பவம் நடந்த தினத்தன்று முதியோர் இல்லத்தில் 149 முதியோர்களும் 9 ஊழியர்களும் இருந்துள்ளனர்.நள்ளிரவில் தூக்கத்தில் இருந்த முதியவர்களை வரிசையாக கூரான ஆயுதத்தால் கழுத்தை குறிவைத்து தாக்கியுள்ளார்.இதில் 19 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து நள்ளிரவு 2.50 மணியளவில் பொலிஸார் வந்து சேர்வதற்குள் உமாத்சு அங்கிருந்து மாயமானான். மிகவும் ஆபத்தான நகரில் நடமாடுவது பொலிஸாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் உமாத்சு விடியும்வரை காத்திருந்த பின்னர் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தன்மை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளிடம், ஊனமுற்றவர்கள் நாட்டுக்குப் பாரம், அவர்கள் உயிருடன் இருப்பது வீண் என முணுமுணுத்துள்ளார். முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் சில மாதங்களுக்கு முன்னர், முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்,ஊனமுற்ற முதியவர்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தானே அந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் உமாத்சு குறிப்பிட்டுள்ளார்.மட்டுமின்றி, தனது பெயர் முகவரியுடன், தொலைபேசி இலக்கத்தையும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம் தொடர்பாக பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தியதுடன், உளவியல் சிகிச்சைக்கும் பரிந்துரைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் மார்ச் 2 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட உமாத்சு, சுமார் 146 நாட்களுக்கு பின்னர் முதியோர் இல்லத்தில் புகுந்து இவ்வாறு கொலை செய்துள்ளார்.ஹிட்லரின் பாணியை பின்பற்றியதாக கூறிய உமாத்சு, தாம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என விசாரணையின் போது தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் நீதிமன்ற விசாரணை தொடங்கிய நிலையில், உமாத்சு மீது 19 கொலை வழக்கும் 26 கொலை முயற்சி வழக்கும் நிரூபிக்கப்பட்டன.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமாத்சு, தமது நாளை எண்ணி ஜப்பானில் உள்ள சிறை ஒன்றில் காத்திருக்கிறார்.