நாளாந்தம் சுமார் 4 மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கும் நிலை ஏற்படலாம்; எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு (2022) முன்னர் பெரியளவில் கடனைப் பெற முடியாதுபோனால் நாளாந்தம் சுமார் 4 மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கும் நிலை ஏற்படலாமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கடனைப் பெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. ஆனாலும் உடனடித் தீர்வு கிடைக்குமெனக் கூற முடியதென்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையும் தற்போது கையிருப்பில் உள்ள டொலர்கள் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை உருவாகுமெனவும் உதய கம்மன்பில கூறினார்.

ஆகவே மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மக்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில கேட்டுள்ளார்.

நான்கு மணி நேர மின்வெட்டுக்கு முன்னதாக ஒன்றரை மணி நேர மின்வெட்டை இன்னும் சில நாட்களில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் கூறினார்.

இதேவேளை, மின்சாரத்துறை ஊழியர்களின் சம்பளவு உயர்வுப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லையானால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய நான்கு பில்லியன் தொடலர் தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

இந்திய அந்தியச் செலவாணிக் கையிருப்புக்காக ஒரு பில்லியன் தொடலா்களை உடனயடிாக வழங்கவுள்ளதாக கடந்த வியாழக்கிழமை (13-01-2022) அறிவித்திருந்தது.

சீன அபிவிருத்தி வங்கியும் ஒரு பில்லியன் தொடலர்களை வழங்கவுள்ளதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.