சுக்கிரன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பலன்களை பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் புதுமையான யோசனைகளால் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சில உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இக்காலத்தில் உங்கள் துணையுடன் வாதிடாதீர்கள். முடிந்தால் உங்கள் துணையுடன் பேசும் போது சாந்தமாக இருங்கள். தொழில்ரீதியாக, புதிய வேலை அல்லது பகுதி நேர திட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இக்கால கட்டத்தில் உங்கள் அறிவை மேம்படுத்த உதவும் படிப்புகளில் சேர்வதில் மற்றும் உங்கள் படைப்பாற்றல் மற்றும் திறன்களை வளர்ப்பதில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் நல்லெண்ணத்தை பராமரிக்க நீங்கள் கூடுதல் முயற்சி மற்றும் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பத்தை சந்திக்க நேரிடலாம், ஆனால் உங்கள் ஞானமும் முயற்சியும் குழப்பத்தைத் தீர்க்க உதவும். உங்கள் நெருங்கியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இல்லை என்று நீங்கள் உணரலாம். வாழ்க்கையை அனுபவிக்க பணத்தை செலவிட விரும்புவீர்கள். ஆனால் அதிக செலவுகள் காரணமாக அதை செய்ய முடியாது.

கடகம்

கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குறைவான பலன்களே கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். முடிந்தவரை அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலம் வேலையில் சில புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும். ஆனால் இது சற்று சிக்கலானதாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்துவதற்கு உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் சொந்த திறமையுடன் ஒரு திட்டத்தை தொடங்குவீர்கள். இக்காலத்தில் உங்கள் காதல் வாழ்க்கை குறித்த சில கேள்விகள் மனதில் எழும். இந்த காலகட்டத்தில் வாழ்க்கைத் தரம் உயரும் மற்றும் சமூகத்தில் நல்ல பெயர் மற்றும் புகழையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி ஆதாயத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் இக்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

கன்னி

கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களின் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இக்காலத்தில் உங்களின் வேலைக்கான வெகுமதி கிடைக்கும். யாரிடமும் பிடிவாதமாக நடந்து கொள்ளாமல் அமைதியாக இருக்கவும், மென்மையாகப் பேசவும், சில விஷயங்களை விட்டுவிட்டு சுமூகமான உறவுகளைப் பேணவும் அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக நீங்கள் கடந்த காலத்தில் செய்த முதலீட்டின் மூலம் லாபம் பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் கையெழுத்திட்ட வணிக ஒப்பந்தங்கள் இக்காலத்தில் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும்.