நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற வடக்கு, கிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருவரை தவிர மற்றைய எல்லோரும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள்.
அதை முறியடிப்பதற்கு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைந்து இந்த மோசனமான துரோகத்திற்கு எதிராக அணி திரள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசத்தின் நலன் கருதி தமிழ் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு தரப்பும் எம்மோடு கைகோர்த்து இந்த விடயத்தில் ஒன்று பட வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கு எதிராக வன்னியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றோம்” என்றார்.