கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நிரம்பி வழியும் கொவிட் தொற்றாளர்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (HDUs) சகல படுக்கைகளிலும் தற்போது ‘கொவிட்’ நோயாளிகள் நிரம்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அந்தோனி மென்டிஸ்(Dr. Anthony Mendis) தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இரண்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததாகக் கூறிய விசேட வைத்தியர் டொக்டர் அந்தோனி மென்டிஸ், நாடு முழுவதும் தேசிய வைத்தியசாலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் இது அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

சமூகத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு (ICUs) பரிந்துரைக்கப்படுகிறார்கள். மற்றும் HDU. பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் சதவீதமும் அதிகரித்து வருகிறது, என்றார்.

கொவிட் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி போடுவதே அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்றும் அத்துறையின் சிறப்பு மருத்துவர் டொக்டர் அந்தோனி மென்டிஸ் கூறினார்.