இந்த ராசிக்காரங்க கோபத்தால அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்களாம்..இவங்க கிட்ட உஷாரா இருங்க!

மேஷம்

இவர்கள் பேசுவதை விட செய்து காட்டுவதில் ஆர்வம் உடையவர்கள். சிறப்பான நாட்களில் இவர்கள் ஆற்றலும், உற்சாகமும் நிறைந்து காணப்படுவார்கள். ஆனால் ஏதேனும் இவர்களை கோபமூட்டினால் இவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். கோபத்தில் இருக்கும்போது இவர்கள் மற்றவர்கள் மனது கஷ்டப்படுவதை பற்றி துளியும் யோசிக்காமல் பேசுவார்கள். தங்களின் கோபத்தால் இவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்வார்கள். இவர்களின் கோபம் நீண்ட காலம் நீடிக்காது, ஆனால் அந்த குறுகிய காலத்தில் இவர்கள் பேரழிவை ஏற்படுத்துவார்கள். இவர்களின் கோபம் மற்றவர்களை பயமுறுத்துவதாகவும் இருக்கும்.

விருச்சிகம்

தேள் அதன் கோபத்திற்கும், வஞ்சத்திற்கும் நன்கு அறியப்பட்டது. பொதுவாகவே இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய, அர்ப்பணிப்புள்ள, மர்மங்கள் நிறைந்தவர்கள். இந்த குணங்கள் இவர்களுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைத்தையும் இவர்களின் கோபம் சிதைத்துவிடும். இவர்கள் தங்களின் கோபத்தை மறைக்கும் ஆற்றல் கொண்டவர்கள், தங்களின் கோபத்தை வெளிப்படுத்த சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். யாராவது இவர்களை துன்புறுத்தினால் உடனடியாக அதனை வெளிப்படுத்தமாட்டார்கள், ஆனால் சரியான நேரத்தில் அதனை வெளிப்படுத்தும்போது அது நாசத்தை உண்டாக்கும். இவர்களை பற்றி அறிந்தவர்கள் இவர்களிடம் பழகவே அஞ்சுவார்கள்.

ரிஷபம்

உங்களின் கோபம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். ஏனெனில் எப்போதும் இவர்கள் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால் இவர்களின் பொறுமை சோதிக்கப்படும்போது இவர்களின் மறுமுகம் வெளிப்படும். இவர்களின் கோபம் வெளிப்படும் போது அது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இவர்களின் கோபம் உடனடியாக சரியாகக் கூடியதல்ல. இவர்களின் கோபம் நாட்கள், மாதங்கள் ஏன் வருடங்கள் வரை கூட நீடிக்கும். அவர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி கோபம் இவர்களை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும்.

சிம்மம்

ராசியிலேயே சிங்கத்தை அடையாளமாக கொண்ட இவர்கள் அவர்களின் கோபத்தால் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். கோபத்தை வெளிப்படுத்த இவர்கள் தாமதிக்கவோ, யோசிக்கவோ மாட்டார்கள். இவர்களை தூண்டுவது மிகவும் எளிதானது, இவர்களுக்கு சவால் விட்டாலே போதும் இவர்களின் கோபம் வெளிப்படும். தங்களின் திறனை நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்களை பற்றி தெரிந்த யாரும் இவர்களிடம் சவால் விடமாட்டார்கள்.

தனுசு

இவர்கள் வெடிகுண்டை போன்றவர்கள். கோபத்தில் இவர்கள் வெடிக்கும்போது அது நாசத்தை ஏற்படுத்தும். பொதுவாக இவர்கள் அமைதியானவர்களாகவே இருப்பார்கள், ஆனால் இவர்கள் வெடிக்கும்போது அது அனைவராலும் மறக்க முடியாததாக இருக்கும். கோபத்தில் இருக்கும்போது இவர்கள் மோசமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள், உடல்ரீதியான தாக்குதலை கூட நிகழ்த்துவார்கள். கோபத்தில் இவர்கள் ஏற்படுத்தும் அழிவுகளை இவர்களால் சரி செய்யவும் முடியாது.