இலங்கைக்கு இலவசமாக உதவி செய்யும் சீனா

ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பிற்கான சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீன-இலங்கை இறப்பர் அரிசி வர்த்தக ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவு நிறைவடையவுள்ள நிலையில், வர்த்த அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் வருடாந்த அரிசிக்கான தேவை 2.4 மில்லியன் மெற்றிக் தொன்களாக உள்ளதுடன், சீனாவினால் இலவசமாக வழங்கப்படும் அரிசி முழு நாட்டிற்கும் ஐந்து மாதங்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.