மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 1 மணி 45 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலார் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே எரிபொருள் பற்றாக் குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.