கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

அத்துடன், வீட்டிற்கும் பரீட்சை நிலையத்திற்கும் இடையில் அதிக தூரம் உள்ள நிலையில், அவ்வாறான பரீட்சார்த்திகள் தமது வீட்டிற்கு அருகிலுள்ள விசேட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.