யாழ்.சாவகச்சேரி பொலிஸ் அதிகாரி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை வழங்க மறுத்தமையினாலேயே தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அண்மைக் காலமாக நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.