மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.ரன்வீர் கப்பல் வெடித்ததில் கடற்படை வீரர்கள் 3 பேர் பலி!

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.ரன்வீர் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடமொன்று தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்த மாலுமிகள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.