துணி மாஸ்க் யூஸ் பண்ணுறவங்களுக்கு எச்சரிக்கை பதிவு !

பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.ஆனால் இந்த துணி மாஸ்க்குகள் கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்காது என்று பல சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் புதிய ஆராய்ச்சியின் படி, பல பிறழ்வுகளைக் கொண்ட மற்றும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரானை, துணி மாஸ்க் அணிவதன் மூலம் தடுக்க முடியாது.ஏனெனில் துணி மாஸ்க் பாதுகாப்பைத் தவிர்க்கக்கூடிய சிறிய துகள்களைக் கொண்டிருக்கலாம்.

துணி மாஸ்க் ஏன் பாதுகாப்பற்றவை?
பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளையே அணிய விரும்புகிறார்கள். ஏனெனில் அவை வசதியானவை.
இருப்பினும், சுகாதார நிபுணர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் வடிவத்தைக் கொண்ட துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.மேலும் ஒற்றை அடுக்கு கொண்ட துணி மாஸ்க்குகள் பெரிய நீர்த்துளிகளைத் தடுக்கலாமே தவிர, சிறிய நீர்த்துளிகள் அவற்றால் தடுக்கப்படுவதில்லை.

அதுவும் கொரோனா மாறுபாடு மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருந்தால், துணி மாஸ்க் அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் இரண்டுமே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.
உங்களுக்கு ஓமிக்ரைனில் இருந்து சரியான பாதுகாப்பு வேண்டுமானால், துணி மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏனெனில் தொற்றை உண்டாக்கும் சிறிய நீர்த்துளிகள், துணியின் பெரிய துளைகள் வழியாக நுழைந்து தொற்றை உண்டாக்கலாம். நீங்கள் அணியும் மாஸ்க்குகளைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

துணி மாஸ்க்கின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அதை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியும் மாஸ்க்குகளைப் போலின்றி, துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
அறுவை சிகிச்சை மாஸ்க்குகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவை ஒரு தளர்வான மற்றும் பொருத்தமான பாதுகாப்பு சாதனமாகும். இந்த மாஸ்க்கானது அணிபவரின் உதடுகள் மற்றும் மூக்குக்கு இடையே ஒரு தடையை உருவாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் சூழலில் இருந்து உடனடி பாதுகாப்பளிக்கிறது.

துணி மற்றும் சர்ஜிக்கல்
சர்ஜிக்கல் மாஸ்க்குகள் பொருட்களை நன்கு வடிகட்டக்கூடிய ஒரு பொருளால் ஆனது. ஆனால் அவை மெலிதாக இருக்கும். எனவே அதன் மேல் ஒரு காட்டன் மாஸ்க்கை வைப்பது, கசிவைத் தடுக்கிறது.இரண்டாவது அடுக்கை சேர்ப்பது வடிகட்டலை அதிகரிக்கிறது.இதில் ஒரு அடுக்கு 50% துகள்களை வடிகட்டினால், இரண்டாவது அடுக்கு அதோ இணைத்து 75% துகள்களை வடிகட்டுகின்றன.