நாட்டின் காலநிலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல் !

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்றுமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது மின்னல்-இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடி மின்னலின் போது அப்பகுதியில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.