இன்று மட்டும் நால்வர் சுகம்!! இதுவரை 21 பேர் குணமடைவு..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார அமைச்சு இந்தத் தகவலைத் தெரிவித்தது. அதற்கமையாக சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில்,கொவிட் 19 நோய்த் தொற்று சந்தேகத்தில் 231 பேர் சிகிச்சைபெற்றுவருவதுடன் 146 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இதேவேளை, இருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.