வேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் கோர விபத்து…சாரதி ஸ்தலத்தில் பலி..!! உயிருக்குப் போராடும் உதவியாளர்..!!

மரக்கறி கொண்டு சென்ற சிறியரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் எல்ல- வெல்லவாய பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் லொறியின் சாரதியான 33 வயதுடைய அக்கரைப்ப்பற்றைச் சேர்ந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்திற்குள்ளான லொறியின் உதவியாளர் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.இவ்விபத்து குறித்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.