மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சடலமாக மீட்ப்பு!

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கானை மண்டிகை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாதகல் பகுதியைச் சேர்ந்த கடம்பன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் உரிமையாளர், மூன்று நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.