இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சேவை அறிவித்தலானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.