நீர் விநியோகத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

கட்டணம் செலுத்தாததால் நீர் விநியோகத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளை வீட்டில் இருந்த பெண் ஒருவர் தாக்கிய சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது கந்தளாய், பெரமடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர் கட்டணம் செலுத்தாமையால் குடிநீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு அதிகாரிகள் குறித்த வீட்டிற்கு சென்றிருந்தனர்.

இவ்வாறு அதிகாரிகள் வரும்போது வீட்டில் இருந்த பெண் அவர்களைத் தாக்கியுள்ளார். குறித்த பெண் அதிகாரிகளை தாக்குவதனையும் தடுப்பதனையும் அதிகரிகளில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.