தலை வலியால் பிரச்சனையா? அப்ப இதை மட்டும் ஒரு கப் குடிங்க

பொதுவாக தலைவலி என்பது அனைவருக்கும் வரும் பொதுவாக விஷயங்களில் ஒன்றாகும்.

மற்ற வயதினரை விட 15 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்கே தலைவலி அதிகம் வருகிறது. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி அதிகம்.

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும்.

அதனை முடிந்தளவு போக்குவது நல்லது. தற்போது தலைவலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் ஒன்றை இங்கே பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்:

  • காபி
  • எலுமிச்சை

 

செய்முறை

முதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.

காபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும்.

எலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.