தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!

உழவர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள், பொங்கலுக்கு தேவையான இதர பொருட்கள் , பட்டாசுகளை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றமையிம்னை அவதானிக்க கூடியதாகவுள்ளது.