கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம்!

கடந்த அண்டில் மொத்தமாக ஆயிரத்து நாநூறு பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 1400 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளமை இரகசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஆண்டில் இலங்கையில் அச்சிடப்பட்ட மிகப் பெருந்தொகை பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.