இலங்கையில் மெல்ல மெல்ல ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று காலை வரையிலான காலப்பகுதியில் 992 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று மாலை வரை கொரோனா தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 418ஆக இருந்தது.149 பேர் கொரோனா குணங்குறிகளுடன் கண்காணிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். 559 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.