கொண்டைக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா? வாங்க பார்க்கலாம்

கொண்டைக்கடலை நம் நாட்டில் பரவலாக உபயோகபடுத்தபடும் ஒரு சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்.

இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது.

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

இதில் பல மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

  • முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் முடி கொட்டுதலை தடுக்கும்.உங்களின் முடி வேரிலிருந்து வலுவாக வளர மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
  • கொண்டைக்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது.
  • தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு ஆரோக்கியமான ஜீரண மண்டலம் இருக்கும்.
  • கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.
  •  எலும்பு வலி கொண்டவர்களும் ஹீமோகுளோபின் குறைப்பாடு கொண்டவர்களுக்கு தினசரி கொண்டைக் கடலை உண்பதை பழக்கமாக்கி கொள்ளலாம். மேலும் இது இரத்த சோகைக்கும் பலன் அளிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் கொண்டைக்கடலை உதவுகிறது. 1 கப் கொண்டைக் கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நன்மை பயக்கிறது.