வடபகுதி மக்கள் தொடர்பில் படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வடபகுதியில் மக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டமாக ஒன்று கூடுவதால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்குமாறு வடக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஆயிரத்தை நெருங்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.மேலும் பொதுப்போக்குவரத்தும் இப்போது வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளதால், மக்கள் அதிகம் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அவசியமான தேவை கருதி வெளியில் செல்லுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா வைரஸ் அபாயம் இன்னும் நீங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அநாவசியமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.