போர் வெற்றிக் கொண்டாட்ட அணிவகுப்பு பயிற்சிக்குச் சென்ற கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று..!!

இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் மேற்கொள்ளப்படும் அணிவகுப்பு பயிற்சியில் பங்கேற்ற கடற்படை சிப்பாய்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கடற்படை சிப்பாய்களின் முதலாவது PCR பரிசோதனை அறிக்கை முடிவினை மீண்டும் உறுதி செய்வதற்காக இரண்டாவது பரிசோதனை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அணி வகுப்பிற்காக ஈடுபடுத்தப்பட்ட கடற்படை சிப்பாய் ஒரு மாத காலகமாக தனிமைப்படுத்தப்பட்டு, பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் என பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முற்றர் பல முறை இவ்வாறு முதலாவது PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகிய நோயாளிகள் இரண்டாவது பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.இதன் காரணமாக இந்த கடற்படை சிப்பாய்களுக்கும் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தச் சிப்பாய்களுக்கும் முதலாவது சோதனையில் கொரோனா உறுதியாகியதனை தொடர்ந்து, அவர்களின் அருகில் இந்தவர்கள் தனிமைப்படுத்தக்கட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.