இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஒருவருக்கு நேர்ந்த கதி!

இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிவிதிகல – கிரிமடுவ பிரிவின் கீழ் பகுதியில் நேற்று (11) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரைத் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் நிவிதிகல, கிரிமடுவ லைமா பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.