கொழும்பு துறைமுக நகரத்திற்கு செல்பவர்கள் கவனத்திட்கு !

கொழும்பு துறைமுக நகரத்தின் காலி முகத்திடலை ஒட்டிய செயற்கைக் கடற்கரை பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது.
காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி, கரையில் குடியேறுவதை வெளிக்காட்டியுள்ளது.

முன்னதாக வெள்ளத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய கடற்பரப்புகளில் மூன்று முதலைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்சமயம் கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கைக் கடற்கரையில் காணப்பட்ட முதலையானது, முன்னர் காணப்பட்ட முதலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையில் உள்ள நீர் ஓடை மூலம் ஊர்வனங்கள் கடல் பகுதிகளுக்குள் நுழைவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.