கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று காலமானார். கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சுமார் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு உய்ரிழந்துள்ளார்.

60 வயதாகும் கித்சிறி கஹட்டபிட்டிய, ஐக்கிய மக்கள் சக்தியின் புலத்சிங்கள தொகுதி அமைப்பாளராக அவர் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.