யாழ். பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் இன்று காலை விடுவிப்பு..!

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாத குழந்தையொன்று உட்பட 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில், இலங்கை பலாலி விமானப்படைத் தளபதி எயார் மார்சல் டி.எல்.எஸ்.டயஸ் சார்பாக பலாலி விமானப்படைத் தளபதி குறூப் கப்டன் எ.வி.ஜயசேகர, முன்னிலையில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு, பேருந்து மூலம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.