2022-ல் இந்த ராசிக்காரங்க ரொம்ப ஆபத்தானவங்களாம்; இதில உங்க ராசி இருக்கா?

மகரம்

ஆபத்தான ராசிகளின் பட்டியலில் முதலில் இருக்கும் ராசி மகரம். 2022-ல் இந்த ராசிக்காரர்கள் எதற்கும் கவலைப்படாத மனப்பான்மையுடன் தொழில்முறை குற்றவாளிகளாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் எந்த வகையான குற்றத்தையும் சிறப்பாக செய்வார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் சற்று பொறுப்பற்றவர்கள் என்பதால், விரைவில் சிக்கிக் கொள்வார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் சிடுசிடுவென்று சற்று மோசான மனநிலையுடனேயே இருப்பார். இதுவே இவர்களை ஆபத்தான ராசிக்காரர்களுள் ஒன்றாக்குகிறது. சிங்கத்தின் அடையாளத்தைக் கொண்ட இந்த ராசிக்காரர்கள், சுட்டெரிக்கும் சூரியனால் ஆளப்படுகிறார்கள். பெயர் மற்றும் புகழைப் பெறுவதற்காக எந்த ஒரு குற்ற செயலையும் செய்வார்கள். அங்கீகாரம் இவர்கள் விரும்புவது என்பதால், அது எவ்வளவு பெரிய குற்ற செயல் அல்லது ஆபத்தான விஷயங்களையும் செய்தாலும் கிடைக்கும்.

விருச்சிகம்

பொறாமை, ஆக்கிரமிப்பு மற்றும் சோகமாக இருக்கும் திறன் ஆகியவை தான் இந்த ராசிக்காரர்களை ஆபத்தான ராசிகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற வைக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சூழ்நிலைகள் சரியாக அமையாத போது, இவர்களின் பொறாமை மற்றும் ஆக்கிரமிப்பு குணம் தீங்கு விளைவிக்கிறது.

தனுசு

ஆபத்தான ராசிகளின் பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருப்பது தனுசு. இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் இவர்கள் மிகவும் கோபமான சுபாவத்தைக் கொண்டவர்கள். இவர்கள் விரும்புமாறு விஷயங்கள் நடக்காத போது, இவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்

எதையும் நன்கு கையாளும் மற்றும் ஆக்கிரோஷமான குணத்தைக் கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள். இவர்கள் பொதுவாக நன்கு நடந்து கொண்டாலும், பழிவாங்க நினைத்துவிட்டால் அதை திறமையாக செய்வார்கள். இந்த ராசிக்காரர்களின் கவர்ச்சிகரமான தலைமைத்துவ பண்புகள் இவர்களை எதையும் சிறப்பாக கையாள வைக்கிறது. எனவே கும்ப ராசிக்காரர்கள் அமைதியானவராக தெரிந்தாலும், மிகவும் ஆபத்தானவர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நிதி அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. பொய் சொல்வதில் தேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் பட்டியலின் நடுவில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் மீது அதிக ஆர்வம் என்பதால், பணம் தொடர்பான குற்றங்களில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு இந்த ராசிக்காரர்கள் கவனம் செலுத்தும் மற்றொரு துறை போதைப்பொருள்.