டொலர் நெருக்கடியால் மின்சார சபைக்கு ஏற்பட்ட சிக்கல்!

தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியின் காரணமாக நிலக்கரி அனல்மின் நிலையங்களின் செயற்பாடும் சிக்கலுக்குரியதாக மாறியுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் இல்லாததே இதற்கான பிரதான காரணம் என அதன் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த வருமானம் குறைந்துள்ளதால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கூட பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடனுக்கு எரிபொருளை வழங்க முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை (CEB) தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு எப்போதும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.