வாயு தொல்லையால் அவதியா? அதனை போக்க இதோ சில டிப்ஸ்

பொதுவாக இன்றைய காலக்கட்டங்களில் வாயு பிரச்சனையை எல்லா வயதினரும் சந்தித்துவருகிறார்கள்.

நம் உண்ணும் உணவு முறை மாற்றமே இதற்கு பெரிய காரணமாக இருக்கின்றது. இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.

தற்போது இதை போக்கு சில எளிய வழிதுறைகள் இங்கே பார்ப்போம்.

  • இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.
  • பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு பூண்டு.
  •  திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம்.
  • தயிர், பால் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதால் குடலில் மலத்தை கடப்பது என்பது கடினமாக இருக்கும்.
  • புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
  • மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
  • காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.