பொத்துபிட்டிய பகுதியில் 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது!

பொத்துபிட்டிய பகுதியில் 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றை நேற்று சோதனைக்கு உட்படுத்திய போது அந்த வானிலிருந்து 63 கிலோ 20 கிராம் கேரள கஞ்சா கைப்பபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 7 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாக்களின் பெறுமதி சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.